தஞ்சாவூர் தேர் விபத்து;வார்த்தைகளில் சொல்ல முடியாத சோகம் - குடியரசுத் தலைவர் இரங்கல்..!
தஞ்சாவூர் தேரோட்டத்தில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டம் களிமேடு கிராமத்தில் குருபூஜை விழாவை முன்னிட்டு நேற்று நள்ளிரவு 12 மணிக்கு தேர் திருவிழா நடைபெற்றது.
இந்த தேர் திருவிழாவில் நுாற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். அப்போது தேர் உயர் மின்அழுத்த கம்பியில் உரசி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் இரண்டு சிறுவர்கள் உட்பட 11 பேர் உயிரிழந்தனர்.15 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விபத்து சம்பவம் தொடர்பாக குடியரசுத் தலைவர் இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது ட்விட்டர் பதிவில் தஞ்சாவூரில் ஊர்வலத்தில் மின்சாரம் பாய்ந்து குழந்தைகள் உட்பட பல உயிர்கள் பலியாகியது வார்த்தைகளில் சொல்ல முடியாத சோகம்.
அவர்களை இழந்து வாடும் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
The loss of life, including that of children, due to electrocution in a procession in Thanjavur is a tragedy beyond words. My deepest condolences to the bereaved families. I pray for the speedy recovery of the injured.
— President of India (@rashtrapatibhvn) April 27, 2022