தஞ்சாவூர் தேர் விபத்து - உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் பிரதமர் மோடி அறிவிப்பு..!

Tamil nadu Narendra Modi
By Thahir Apr 27, 2022 04:10 AM GMT
Report

தஞ்சாவூர் தேரோட்டத்தில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டம் களிமேடு கிராமத்தில் குருபூஜை விழாவை முன்னிட்டு நேற்று நள்ளிரவு 12 மணிக்கு தேர் திருவிழா நடைபெற்றது.

இந்த தேர் திருவிழாவில் நுாற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். அப்போது தேர் உயர் மின்அழுத்த கம்பியில் உரசி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் இரண்டு சிறுவர்கள் உட்பட 11 பேர் உயிரிழந்தனர்.15 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த விபத்து சம்பவம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் ட்விட்டர் பதிவில்,தமிழகத்தின் தஞ்சாவூரில் நடந்த அசம்பாவித சம்பவம் மிகுந்த வேதனை அளிக்கிறது.

துக்கத்தின் இந்த நேரத்தில் என் எண்ணங்கள் பிரிந்த குடும்பங்களுடன் உள்ளன. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைவார்கள்.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் இருந்து தலா ரூ. 2 லட்சமும்,காயமடைந்தவர்களுக்கு ரூஇ50 ஆயிரம் வழங்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.