தஞ்சாவூர் சப்பர தீ விபத்து ; நா தழுதழுக்க பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ்..!
தஞ்சாவூர் சப்பர தீ விபத்து குறித்து சட்டப்பேரவையில் விளக்கம் அளித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பேசினார்.
நேற்று அதிகாலை தஞ்சாவூர் மாவட்டம் களிமேடு பகுதியில் அப்பர் குருபூஜையை அடுத்து சப்பர திருவிழா நடைபெற்றது.
நள்ளிரவு தொடங்கிய சப்பர முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்தது.அதிகாலை 3 மணிக்கு களிமேடு பகுதிக்கு வந்த போது சப்பரத்தின் உச்சி பகுதி உயர்மின்னழுத்த கம்பியின் மீது மோதி தீ பிடித்து எரிந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர்.16 பேர் படுகாயம் அடைந்து தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதையடுத்து அந்த மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சம்பவ இடத்திற்கு சென்று பாதிக்கபட்ட குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
இதையடுத்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,அமைச்சர் கே.என்.நேரு உள்ளிட்டோர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
இந்நிலையில் சட்டப்பேரவையில் இந்நிகழ்வு பற்றி பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் தனிமடத்திற்கு சொந்தமான இந்த தேர் திருவிழத 94 வருடங்களாக நடைபெற்றது என்றார்.
அதிகாலை 3 மணியில் இருந்த 3.10 மணிக்குள் இந்த விபத்து நடந்தது.முதலமைச்சர் காலை 5 மணிக்கு தொடர்பு கொண்டார்.
உடனடியாக அங்கே சென்று பணிகளை மேற்கொள்ள உத்தரவிட்டதாக தெரிவித்தார். நீ செல்..நான் இரங்கல் தீர்மானத்தை வாசித்துவிட்டு வருவதாக கூறினார் முதலமைச்சர்.
பின்னர் அங்கு சென்றதாக கூறிய அவர் 11 மாதங்களாக பள்ளி மாணவர்களுக்கு பதக்கங்கள் மற்றும் மாலைகள் வழங்கி வந்தேன் ஆனால் பிணவறையில் இருந்த 8 ஆம் வகுப்பு மாணவனுக்கு மாலை அணிவித்ததாக நா தழுதழுக்க கூறினார்.
பின் முதலமைச்சர் நடந்தே சென்று பலியானவர்களின் உடலுக்கு மாலை அணிவித்து நிதியுதவி வழங்கி மரியாதை செலுத்தினார்.
என்னிலையிலும் தன்னிலை மறக்காத நல்ல மனிதனை இந்த நாடு முதலமைச்சராக பெற்றிருக்கு என்று தான் சொல்ல முடியும் என்றார்.
முதலமைச்சர் இந்த நிகழ்வில் அரசியல் பார்க்க வேண்டாம் என்று ஆம் அந்த ஊராட்சி மன்றத்தின் தலைவர் அதிமுகவை சார்ந்தவர்,அந்த ஒன்றிய குழு கவுன்சிலர் பாஜகவை சார்ந்தவர்,மாவட்ட கவுன்சிலர் திமுகவைச் சார்ந்தவர் இவர்கள் மூன்று பேரும் சேர்ந்து பணியாற்றினார்கள் என்று கூறினார்.