தஞ்சாவூர் தேர் விபத்து ஒரு நபர் விசாரணைக் குழு அமைப்பு - அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவிப்பு..!

By Thahir Apr 27, 2022 07:31 AM GMT
Report

தஞ்சாவூர் தேர் விபத்து குறித்து விசாரிக்க குமார் ஜெயந்த் ஐஏஎஸ் தலைமையில் ஒரு நபர் விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

தஞ்சாவூர் அப்பர் கோவில் திருவிழாவின் தேரோட்டம் களிமேடு பகுதியின் கடைசி பகுதியில் சென்று திரும்பும் போது பின் பக்கம் இணைக்கப்பட்டிருந்த ஜெனெரேட்டர் வெயிட்டின் காரணமாக தேர் ஒரு பக்கமாக தேர் இழுத்து செல்லப்பட்டு,

தேரின் ஒரு பகுதியில் ரோட்டின் ஒரு பகுதியில் செல்லும் 33 KV உயர் மின்னழுத்த கம்பியுடன் உச்சிப்பகுதி மின்கடத்து துாரத்தில் சென்றதால் 190 மில்லி செகண்ட் அதாவது 0.19 வினாடிக்குள் ரிளே இண்டிகேசன் மூலம் கம்பியில் செல்லும் 33 KV மின்சாரம் தானாக நின்று விட்டதாக தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர்,தேர் இரும்பு சட்டங்கள் மற்றும் சீரியல் விளக்குகளால் அலங்கறிக்கப்பட்டு இருந்தது. தேரின் மேல் பகுதியில் தீ ஏற்பட்டதாக கூறினார்.

இந்த மின்னழுத்த கம்பி தரைமட்டத்தில் இருந்து 25 அடி உயரத்தில் பாதுகாப்பான உயரத்தில் செல்கிறது. தேரின் பின்பக்கம் இருந்த ஜெனரேட்டர் ஆஃப் ஆகாமல் தொடர்ந்து இயங்கி கொண்டே இருந்துள்ளது.

அப்போது 33 KV மின்சாரம் நின்றுவிட்டது.ஆனால் ஜெனரேட்டர் தொடர்ந்து மின்சாரம் வழங்கி கொண்டிருந்தது.

எனவே அதன் மூலம் இந்த விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என்றால் அமைச்சர் செந்தில் பாலாஜி. தஞ்சாவூர் தீ விபத்துக்கான காரணம் குறித்து விரிவாக விசாரித்து இது போன்ற துயர நிகழ்வுகள் வரும் காலங்களில் நடைபெறாமல் தடுத்திடுவதற்கான பரிந்துரைகளை அரசுக்கு அளித்திட,

வருவாய் துறை முதன்மை செயலாளர் குமார் ஜெயந்த் ஐஏஎஸ் தலைமையில் ஒரு நபர் விசாரணை குழு அமைத்திட முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார் என்று தெரிவித்தார்.