தஞ்சை சப்பரம் தீ விபத்து - சம்பவ இடத்தில் ஒரு நபர் குழு விசாரணை..!

By Thahir Apr 30, 2022 09:52 AM GMT
Report

தஞ்சாவூர் சப்பரம் தீ விபத்து குறித்து சம்பவ இடத்தில் ஒரு நபர் குழு நேரில் ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டது.

கடந்த செவ்வாய்க்கிழமை தஞ்சாவூர் மாவட்டம் களிமேடு கிராமத்தில் அப்பர் குருபூஜையை அடுத்து சப்பரம் ஊர்வலம் நடைபெற்றது.

அப்போது சப்பரத்தின் உச்சி பகுதி உயர் மின்னழுத்த கம்பியில் மோதி தீ பிடித்து எரிந்தது. இந்த சம்பவத்தில் 2 சிறுவர்கள் உட்பட 11 பேர் உயிரிழந்தனர்.

மேலும் 16 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்வம் குறித்து விசாரிக்க வருவாய் பேரிடர் மேலாண்மை முதன்மைச் செயலாளர் குமார் ஜெயந்த் தலைமையில் ஒரு நபர் விசாரணை குழு அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டது.

இந்நிலையில் குமார் ஜெயந்த் தலைமையிலான ஒரு நபர் விசாரணை குழு களிமேடு சென்று ஆய்வு நடத்தியது. அதன் பின் சம்பவம் பற்றி துறை அதிகாரிகளுடன் அவர் கலந்தரையாடினார்.