தஞ்சாவூர் தேர் விபத்து ; உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு தலா ரூ.1 லட்சம் நிதியுதவி - அதிமுக அறிவிப்பு..!
தஞ்சாவூர் தேர் விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு அதிமுக நிதியுதவி அறிவித்துள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் களிமேடு கிராமத்தில் குருபூஜை விழாவை முன்னிட்டு நேற்று நள்ளிரவு 12 மணிக்கு தேர் திருவிழா நடைபெற்றது.
இந்த தேர் திருவிழாவில் நுாற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். அப்போது தேர் உயர் மின்அழுத்த கம்பியில் உரசி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் இரண்டு சிறுவர்கள் உட்பட 11 பேர் உயிரிழந்தனர்.16 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் இந்த விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு தலா ரூ.1 லட்சமும்,
காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.25 ஆயிரமும் வழங்கப்படும் என ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் அறிவித்துள்ளனர்.