"செஸ் உலகத்தை மீண்டும் ஒன்றிணைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி" - தானியா சச்தேவ் புகழாரம்!

M. K. Stalin Chess 44th Chess Olympiad
By Nandhini Aug 10, 2022 12:35 PM GMT
Report

44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி

44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள போர் பாயிண்ட்ஸ் ஷெரட்டன் ரிசார்ட்டல் கடந்த 28ம் தேதி தொடங்கி இன்றோடு முடிவடைந்தது.

செஸ் ஒலிம்பியாட்டில் பங்கேற்க 187 நாடுகளில் இருந்து 2000-க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் மாமல்லபுரத்தில் முகாமிட்டனர். போட்டிகள் தினமும் பிற்பகல் 3 மணி முதல் நடந்து வந்தது.

செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறும் நட்சத்திர விடுதியை சுற்றி போலீசாரின் மூன்று அடுக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டது.

இந்திய வரலாற்றில் முதல் முறையாக செஸ் ஒலிம்பியாட் போட்டி இந்தியாவில் அதிலும் குறிப்பாக நமது மாநிலமான தமிழகத்தில் நடைபெற்றது.

நிறைவு விழா

மாமல்லபுரத்தில் 12 நாட்களாக நடைபெற்று வந்த 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி, கண்கவர் நிகழ்ச்சிகளுடன் நேற்று நேரு உள்விளையாட்டு அரங்கில் கோலாகளமாக நிறைவு பெற்றது.

ரூ.1 கோடி பரிசுத் தொகை

இன்று 44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டிகளில் பெண்கள் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற ‘இந்திய ஏ அணி’ வீரர்களுக்கு பரிசுத்தொகையாக ரூ. 1 கோடிக்கான காசோலையை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

Thania Sachdev - M.K.Stalin

முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்த தானியா சச்தேவ்

செஸ் ஒலிம்பியாட் போட்டியில் கஜகஸ்தானுக்கு எதிரான போட்டியில் வெள்ளை நிற காய்களுடன் களமிறங்கிய தானியா சச்தேவ் தனது 31-வது நகர்த்தலில் வெற்றி பெற்றார்.

இந்நிலையில், அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில், சென்னை செஸ் ஒலிம்பியாட் வரலாற்று சிறப்பு மிக்கது. செஸ் உலகத்தை மீண்டும் ஒன்றிணைத்ததற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி. விளையாட்டு மீதான உங்கள் ஆர்வமும், அன்பும் அபாரம். செஸ் தொடரை மிகச் சிறப்பாக நடத்த சென்னை ஒரு சிறந்த இடமாக அமைந்து இருந்தது. இதை விட யாரும் சிறப்பாக செய்திருக்க முடியாது என்று பதிவிட்டுள்ளார்.