தீபாவளி பண்டிகை - 211 ஆதரவற்ற குழந்தைகளுக்கு புத்தாடைகளை வாங்கி கொடுத்த எம்.எல்.ஏ...!
தீபாவளி பண்டிகையையொட்டி, 211 ஆதரவற்ற குழந்தைகளுக்கு புத்தாடைகள் வாங்கி கொடுத்த சட்டமன்ற உறுப்பினரின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தீபாவளி பண்டிகை
நாடு முழுவதும் வரும் 24-ம் தேதி தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதனையடுத்து, கடைகளில் பட்டாசு விற்பனையும், புத்தாடை விற்பனையும் சூடு பிடித்துள்ளது. கடைகளில் மக்கள் மக்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது.
டெல்லி உள்ளிட்ட சில மாநிலங்களில் பட்டாசு வெடிக்க, விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழகம் உள்ளிட்ட ஒரு சில மாநிலங்களில் தீபாவளி அன்று பட்டாசு வெடிக்க நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
புத்தாடைகளை வாங்கி தந்த தங்கபாண்டியன்
இந்நிலையில், ராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் தங்கபாண்டியன், 211 ஆதரவற்ற குழந்தைகளை ஜவுளிகடைக்கு அழைத்து சென்று புத்தாடைகளை வாங்கி கொடுத்து அழகுப் பார்த்துள்ளார். புத்தாடை வாங்கிக் கொண்ட குழந்தைகள் அவருக்கு மகிழ்ச்சியோடு நன்றி தெரிவித்தனர்.
211 ஆதரவற்ற குழந்தைகளுக்கு புத்தாடைகள் வாங்கி கொடுத்த சட்டமன்ற உறுப்பினரின் செயல் அக்கடையில் இருந்த அனைவரையும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.