நாடாளுமன்ற தேர்தல் பாரத போராக அமையும் - மாநாட்டில் தங்கம் தென்னரசு..!
சேலம் இளைஞர் அணி மாநாட்டில் பேசும் போது, இந்தியாவே வியந்து பார்க்கும் அளவிற்கு நான் முதல்வன் திட்டம் உள்ளது என அமைச்சர் தங்கம் தென்னரசு புகழ்ந்து பேசியுள்ளார்.
சேலம் மாநாடு
திமுக 2-வது இளைஞர் அணி மாநாடு மிக பிரமாண்டமாக சேலம் பெத்தநாயகம்பாளையம் பகுதியில் நடைபெற்றது. கட்சியின் முக்கிய தலைவர்கள் பலரும் கலந்து கொண்டு சிறப்புரையாற்றனர்.
ஆளுநரை நிரந்தரமாக நீக்குவது, நீட் விலக்கு பெறுவது போன்ற 25 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அமைச்சர்கள் அன்பில் மகேஷ், உதயநிதி ஸ்டாலின், எம். பி கனிமொழி என பலர் சிறப்புரையாற்றினர்.
பாரத போர்
இந்த மாநாட்டில் பேசிய தமிழ்நாடு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, மூன்று எழுத்தில் நமது மூச்சை அடைக்கிற சொல் GST என்று விமர்சித்தார். தொடர்ந்து பேசிய அவர், தமிழ்நாடு அரசு, ஒன்றிய அரசுக்கு வரிப்பகிர்வாக 6.5 லட்சம் கோடி ரூபாய் வழங்கிய நிலையில், திரும்ப ஒன்றிய அரசு, தமிழ்நாட்டுக்கு தருவதோ வெறும் ரூ.2.5 லட்சம் கோடிதான் என்று சாடினார்.
மேலும், வரும் நாடாளுமன்ற தேர்தல் பாரத போர்க்களமாக அமையும் என்று சுட்டிக்காட்டி, இந்த போர்க்களத்தில் முதலமைச்சர் எழுப்பக்கூடிய அந்த வெற்றி நாதம் சங்க நாதமாக ஒலிக்கும் என்று நம்பிக்கை தெரிவித்து உதயநிதி கையில் இருக்கக்கூடிய காண்டீபமாக அது வீறுகொண்டு எழும் என்றார்.