பரந்தூர் விமான நிலைய விவகாரம்.. மக்களின் குறைகளை விஜய் கேட்டு அரசிடம் சொல்லலாம்!
பரந்தூர் விமான நிலையம் தேவை குறித்து நிதியமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம் அளித்துள்ளார்.
பரந்தூர்
விருதுநகரில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசியவர் தமிழ்நாடு அரசு திவாலாகிறது என்று எடப்பாடி பழனிசாமி கூறியிருப்பது அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டு என்று கூறினார். திமுக தலைமையிலான அரசு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது.
தற்பொழுது செயல்பட்டு வரும் அரசின் நிதி நிலைமை குறித்த எடப்பாடி பழனிசாமியின் குற்றச்சாட்டு வேடிக்கையாக உள்ளது என்று கூறினார். தொடர்ந்து பேசிய அவர், பரந்தூர் விமான நிலையம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அவர்,மாநில பொருளாதார வளர்ச்சிக்கு பரந்தூர் விமான நிலையம் அவசியமான ஒன்று.
தங்கம் தென்னரசு
மற்ற மாநிலங்களில் உள்ள சர்வதேச விமான நிலையங்களை விடச் சென்னை விமான நிலையம் பரப்பளவில் சிறியதாகவே உள்ளது. மேலும் தொழில் வர்த்தக கட்டமைப்பை உறுதி செய்ய பரந்தூர் விமான நிலையம் உருவாக்கப்படுகிறது என்று கூறினார்.
மேலும் 900 நாட்களைக் கடந்து போராடும் நடத்தி வரும் கிராம மக்களை தவெக தலைவர் விஜய் சந்திக்க உள்ளார். இது குறித்த கேள்விக்குமான நிலையத்தை எதிர்த்துப் போராடும் பரந்தூர் மக்களை யார் வேண்டுமானாலும் சந்திக்கலாம். மக்களின் குறைகளை விஜய் கேட்டு அரசிடம் கூறினால் அதனைச் சரிசெய்யப் பரிசீலிப்போம் என்று கூறினார்.