முதல்வர் பயணத்தை கொச்சைபடுத்துவதா ? ஒரு நாள் கூட அவர் நிம்மதியாக இருக்க முடியாது : நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கண்டனம்

DMK Thangam Thennarasu
By Irumporai May 24, 2023 06:41 AM GMT
Report

முதலமைச்சரின் வெளிநாட்டு பயணத்தை இபிஎஸ் கொச்சைப்படுத்துவதாக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.

முதலமைச்சர் பயணம்

முதலமைச்சர் மு.க ஸ்டாலின் 9 நாள் சுற்றுபயணமாக சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் சென்றுள்ளார். முதலமைச்சரின் சுற்று பயணத்தை எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சித்து இருந்தார். இதற்கு பதில் அளிக்கும் விதமாக அமைச்சர் தங்கம் தென்னரசு கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளார்.

முதல்வர் பயணத்தை கொச்சைபடுத்துவதா ? ஒரு நாள் கூட அவர் நிம்மதியாக இருக்க முடியாது : நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கண்டனம் | Thangam Tennarasu Kanadanam Eps

அமைச்சர் எச்சரிக்கை

அதில், அதிமுக ஆட்சியின் ஊழல்களை மறைக்க, முன்னாள் அமைச்சர்கள் மீதான சொத்துக் குவிப்பு வழக்கைத் திசைதிருப்ப தொழில் முதலீடுகளை உருவாக்கச் சென்றுள்ள மாண்புமிகு முதலமைச்சரின் வெளிநாட்டுப் பயணம் பற்றி பழனிசாமி அவதூறு பரப்புவதா?

தற்போது அதிமுகவின் இரு முன்னாள் அமைச்சர்கள் மீதான சொத்து குவிப்பு வழக்குகள் பதிவு செய்யப்படு உள்ளதால் , தங்கள் ஆட்சியின் ஊழலை மறைக்க இது போன்ற அவதூறு பரப்பும் வேலைகளில் ஈடுபடவேண்டாம் ,

மேலும் எடப்பாடிபழனிசாமி பாணிலேயே நாங்கள் பேசத் தொடங்கினால் ஒரு நாள் கூட அவர் நிம்மதியாக இருக்க முடியாது எனறு எச்சரிப்பதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.