சீக்கிரமே சரி செய்யப்படும் : பி.சி.ஸ்ரீராமின் குற்றச்சாட்டு - உடனடியாக பதிலளித்த அமைச்சர் தங்கம் தென்னரசு
ஒளிப்பதிவாளர் பி.சி ஸ்ரீராமின் குற்ற்ச்சாட்டுக்கு அமைசர் தங்கம் தென்னரசு பதில் அளித்துள்ளார்.
மின் தடை
சென்னையில் கடந்த சில மாதங்களாக மின் தடை அதிகரித்துள்ளதாக பலரும் தங்கள் குற்ற்ச்சாட்டை முன் வைத்து வருகின்றனர். இந்த நிலையில் சென்னை சாந்தோம், ஆழ்வார்பேட்டை ஆகிய பகுதிகளில் மின் விநியோகத்தில் சிக்கல் உள்ளதாக ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், குற்றச்சாட்டை பதிவு செய்துள்ளார்.

அமைச்சர் விளக்கம்
அவரின் பதிவுக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு தனது ட்விட்டர் பதிவில் பதில் அளித்துள்ளார்.
அதில், நகரம் முழுவதும் மின் உட்கட்டமைப்பு மேம்படுத்தப்பட்டு வருவதால், இதுபோல் நிகழ்கிறது,இப்பிரச்னையை உடனடியாக சரி செய்ய, அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்படும்; சிரமத்திற்கு வருந்துகிறோம் என பதில் அளித்துள்ளார்.