இது மட்டும் போதும்! ஓபிஎஸ்-யை வீழ்த்தி விடலாம்- தங்க தமிழ்ச்செல்வன் அதிரடி
போடி தொகுதியில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் துணை முதல்வரான ஓ.பன்னீர்செல்வத்தை தோற்கடிப்பேன் என திமுக சார்பில் போட்டியிடும் தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார். போடி தொகுதியில் அதிமுக சார்பில் துணை முதலமைச்சரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் மூன்றாவது முறையாக போட்டியிடுகிறார்.
இவரை எதிர்த்து திமுக சார்பில் தங்க தமிழ்ச்செல்வன் முதன்முறையாக போட்டியிடுகிறார். இதுகுறித்து அவர் கூறுகையில், திமுக தலைவர் ஸ்டாலின் வேட்பாளர் பட்டியலை மிகுந்த கவனத்துடன் தேர்வு செய்துள்ளார். குறிப்பாக அமைச்சர்கள் போட்டியிடும் தொகுதிகளில் அவர்களுக்கு சம பலத்தில் உள்ளவர்களை நிறுத்தி கண்டிப்பாக வெற்றி பெற உழைக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.
அதன் அடிப்படையிலேயே எனக்கும் இந்த முறை போடி தொகுதி வழங்கப்பட்டுள்ளது, துணை முதல்வர் உட்பட அமைச்சர்களின் ஊழல் பட்டியலே போதும்.
கண்டிப்பாக அதிக வாக்குகள் வித்தியாசத்தில் நான் வெற்றியடைவேன், மக்கள் வெற்றி பெற வைப்பார்கள், தேனி மாவட்டத்தின் நான்கு தொகுதிகளிலும் திமுக ஜெயிக்கும் என தெரிவித்துள்ளார்.