சாக்கடை நீரில் அலசி விற்கப்படும் கீரை - வைரலாகும் அதிர்ச்சி வீடியோ

Viral Video Mumbai
By Karthikraja Mar 02, 2025 01:00 PM GMT
Report

கழிவுநீரில் கீரை அலசி விற்கப்படும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

காய்கறி சந்தை

காய்கறிகள் போன்ற உணவுப்பொருட்களை வாங்கும் போது கெட்டுப்போகாமல் உள்ளதா, சுத்தமாக உள்ளதா என்று பார்த்தே மக்கள் வாங்குவார்கள். 

Ulhasnagar vegetable market

சில உணவுப்பொருட்கள் கெட்டுப்போகாமல் இருக்க அதன் மீது ரசாயனம் தெளிப்பதாக அவ்வப்போது தகவல் வெளியாவதுண்டு. நீண்ட நாள் ஆனாலும் கெட்டுப்போகாமல் இருக்கும் ஹைபிரிட் பழம் மற்றும் காய்கறிகள் கூட சந்தையில் உள்ளது.

கழிவுநீரில் கீரை

இதனிடையே, கீரை கட்டுகளை விற்பனையாளர் ஒருவர் கழிவுநீரில் அலசி விற்பனைக்கு வைக்கும் அதிர்ச்சி வீடியோ வெளியாகியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டம் உல்காஸ்நகர் சந்தையில் கீரை விற்பனையாளர்ஒருவர், கீரை கட்டுகளை அங்குள்ள கழிவு நீர் கால்வாயில் நனைத்து எடுத்து விற்பனைக்கு வைக்கிறார். அதை வீடியோ நபர் ஒருவர் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். 

இந்த வீடியோ வைரலான நிலையில், காவல்துறையினர் மற்றும் சுகாதாரத்துறையினரரின் கவனத்திற்கு கொண்டு செல்லபட்டு, மக்களின் ஆரோக்கியத்தோடு விளையாடும் இது போன்ற நபர்களின் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வலுத்துள்ளது.