Saturday, Jan 18, 2025

இன்ஸ்டா பிரபலத்தை கார் ஏற்றி கொலை முயற்சி...அரசு அதிகாரி மகனின் வெறிச்செயல்..!

Mumbai
By Karthick a year ago
Report

பிரபல இன்ஸ்டாகிராம் influencer பிரியா சிங் என்பவரை அவரது காதலரும் பாஜக தலைவருமான அஸ்வஜித் கெய்க்வாட் கொல்ல முயற்சித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரியா சிங்

இதில் பாதிக்கப்பட்ட பிரியா சிங் இன்ஸ்டாகிராமில் அதிக Followers கொண்டு Influencer-ஆக பிரபலமாக இருந்து வருகின்றார். இந்த விபத்து குறித்து பதிவிட்டுள்ள அவர், தனது ‘காதலன்’ அஸ்வஜித் சிங் கெய்க்வாட் தன்னை காரைவிட்டு ஏற்றி கொல்ல முயன்றதாக பதிவிட்டுள்ளார்.

thane-run-over-by-mumbai-ashwajit-gaikwad-bjp

அஸ்வஜித் கெய்க்வாட், அவரது நண்பர்கள் ரோமில் பாட்டீல் மற்றும் சாகர் ஷெல்கே ஆகியோர் மீது அதிவேகமாக வாகனம் ஓட்டுதல், கொடுங்காயங்களை ஏற்படுத்துதல், கொலை மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகின்றது.

பாஜக தலைவர்..?

தற்போது வரை இந்த வழக்கில் கைதாகவில்லை. பிரியா சிங் அஸ்வஜித் கெய்க்வாட்டுடன் கடந்த நான்கரை ஆண்டுகளாகப் பழகி வந்ததாகவும், அவர் தன்னைத் திருமணம் செய்து கொள்வதாக உறுதியளித்ததாகவும் கூறியுள்ளார்.

thane-run-over-by-mumbai-ashwajit-gaikwad-bjp

இது குறித்து அவர் பதிவிட்டுள்ளது - அஸ்வஜீத் தனது மனைவியை விவாகரத்து செய்துவிட்டு, தற்போது பிரிந்து வாழ்வதாக என்னிடம் கூறினார். ஆனால், சம்பவத்தன்று அஸ்வஜீத்தை அவரது மனைவியுடன் நான் பார்த்ததால், அவருக்கு கோபம் வந்தது. அதனால்தான் அவர் என்னைக் கொல்ல முயன்றார்.

thane-run-over-by-mumbai-ashwajit-gaikwad-bjp

இந்த விவகாரத்தில் குற்றம்சாட்டப்படும் அஸ்வஜீத் கெய்க்வாட் தன்னை மும்பையின் தானே பாஜகவின் யுவ மோர்ச்சா பிரிவு பகுதி தலைவர் என்று தனது ட்விட்டர் தளத்தில் அடையாளப்படுத்தியுள்ளார். மேலும், இவர் மகாராஷ்டிரா மாநில சாலை மேம்பாட்டுக் கழகத்தின் நிர்வாக இயக்குநர் அனில் கெய்க்வாட்டின் மகனாவார்.