எடப்பாடியால் எங்களுக்கு அச்சுறுத்தல் உள்ளது...தனபால் பரபரப்பு பேட்டி
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தற்போது எடப்பாடி பழனிசாமிக்காக தன்னிடம் பேரம் பேசினார்கள் என தனபால் பேட்டி அளித்திருந்தார்.
கொடநாடு கொலை
கொள்ளை வழக்கு 2017-ஆம் ஆண்டு நடைபெற்ற கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்குகள் குறித்து தற்போது விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், இந்த வழக்கில் தொடர்புடைய டிரைவர் கனகராஜின் சகோதரர் தனபால் அதிரடி கருத்துக்களை தெரிவித்து வருகின்றார்.
இன்று சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், 2017-ஆம் ஆண்டு முதலே கொடநாடு வழக்கில் தான் உண்மைகளை கூறி வருவதாக குறிப்பிட்டு, தான் யார் சொல்லிக்கொடுத்து பேசவில்லை என கூறினார்.
எடப்பாடிக்காக பேரம்
தொடர்ந்து பேசிய அவர், தற்போதைய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, நபர் ஒருவரின் மூலம் தன்னிடம் பேரம் பேச வருவதாகவும், இந்த வழக்கு தொடர்பாக எடப்பாடி பழனிச்சாமியை காட்டிக்கொடுக்க வேண்டாம் என்றும் எவ்வளவு பணம் வேண்டும் என்று கேட்டதாக கூறினார்.
பணத்திற்கு ஆசைப்படுவானாக இல்லை. கோடநாட்டில் நடந்த உண்மை வெளிவர வேண்டும். இதை தடுக்க கொங்கணாபுரம் பகுதியை சேர்ந்த முக்கியபுள்ளி மூலம் பேரம் பேச வந்தார். பேரம் பேசவேண்டாம் என்று அனுப்பி வைத்துவிட்டேன் என்றார்.
மேலும், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியால் தான் தனக்கும், தனது மனைவி மற்றும் குழந்தைகளுக்கு அச்சுறுத்தல் உள்ளதாக செய்தியாளர்களிடம் கூறிய தனபால், தந்தை இல்லாமல் தனது குழந்தைகள் என்னவாகும் என்ற பயத்தில் தனது மனைவி பயப்படுகிறார் என்று தெரிவித்தார்.