பிரபாகரன் குறித்த கருத்து: கொலை குற்றவாளியை ஹீரோ ஆக்க வேண்டாம் - காங்கிரஸ் கடும் கண்டனம்!
தமிழச்சி தங்கபாண்டியன் கருத்திற்கு காங்கிரஸ், பாஜக சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழச்சி தங்கபாண்டியன்
திமுக எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியனிடம் நேர்காணல் ஒன்றில், ஆளுமைமிக்க தலைவர் ஒருவரை சந்திப்பது குறித்த கேள்விக்கு, தேசிய தலைவர் பிரபாகரன். அவரை தேசிய தலைவர் பிரபாகரன் எனத் தெரிவித்திருந்தார்.
இவரது இந்த கருத்துக்கு பல்வேறு தரப்பிலும் கண்டன குரல்கள் வலுத்துள்ளன. அந்த வகையில், காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம், பிரபாகரனை புகழ்ந்து பேசுவதை காங்கிரஸார் யாரும் விரும்ப மாட்டார்கள். கொலை குற்றவாளியை ஹீரோ ஆக்க வேண்டாம். ராஜீவ்வுடன் 17 பேர் கொல்லப்பட்டதை யாரும் பேசுவதில்லை.
வலுக்கும் கண்டனங்கள்
பிரபாகரன், வீரப்பன், தமிழ் தேசியம் என்பதெல்லாம் இந்துத்துவா தேசியவாதத்தை போன்றதுதான். விடுதலைப் புலிகளின் ரசிகர்களாக இல்லாமல் இலங்கைத் தமிழர்களுடன் நிற்க முடியும் என்பதை ஏன் புரிந்துகொள்ள மறுக்கிறார் எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், பாஜக துணைத் தலைவர் நாராயண் திருப்பதி, முள்ளிவாய்க்கால் படுகொலைக்கு திமுகதான் காரணம் என தமிழச்சி ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார். பிரதமரை கொன்ற இயக்கத் தலைவரை அவர் தேசிய தலைவர் என்று கூறியிருப்பது திமுகவின் ஆணவத்தை காட்டுகிறது. திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் இனியாவது வெளியேறுமா? எனக் கேட்டுள்ளார்.