தமிழச்சி தங்கபாண்டியன் மொபைல் திருட்டு - திறப்பு விழாவில் திருடர்கள் கைவரிசை!
நேற்று டெல்லியில் திமுகவின் அலுவலகமான அண்ணா - கலைஞர் அறிவாலயத்தை திமுக தலைவரும்,தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியல் காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியாகாந்தி,உத்தர பிரதேச முன்னாள் முதலமைச்சர் அகிலேஷ் யாதவ்,ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் ஃபரூக் அப்துல்லா,கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த டி.ராஜா,சீத்தாராம் யெச்சூரி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
இந்த விழாவில் கலந்து கொண்ட திமுக எம்.பி தமிழச்சி தங்கபாண்டியன் செல்போன் திருடப்பட்டுள்ளது.அவரது கைப்பையில் வைத்திருந்த விலையுயர்ந்த ஐபோன் விழாவின் போது திருடப்பட்டுள்ளது.
தமிழக முதலமைச்சர், காங்கிரஸ் தலைவர் சோனியா, நாடாளுமன்ற உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்ட விழாவில் உச்சகட்ட பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
அதனையும் மீறி, திமுக அலுவலக திறப்பு விழாவில் கலந்து கொண்ட திமுக எம்.பி., தமிழச்சி தங்கபாண்டியனின் செல்போன் திருடப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
You May Like this