திமுக-வுக்கு ஆதரவு இல்லை - கருணாஸ், தமீமுன் அன்சாரி திடீர் அறிவிப்பு

dmk ansari karunas
By Jon Mar 09, 2021 01:38 PM GMT
Report

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக திடீரென திமுகவிற்கு அளித்த ஆதரவை கருணாஸ் மற்றும் தமீமுன் அன்சாரி திரும்பப் பெற்றுள்ளனர். கடந்த தேர்தலில் அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட கருணாஸ் மற்றும் தமீமுன் அன்சாரி தற்போது அதிமுக கூட்டணியில் இருந்து விலகியுள்ளனர். திமுகவிற்கு ஆதரவு அளிக்க தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

ஆனால் திமுக அவர்களுக்கு தங்களுடைய கூட்டணியில் இடம் ஒதுக்க தயங்குவதாக பேசப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது அவர்களுக்கு இடம் ஒதுக்க முடியாது என்பதை திமுக தெரிவித்துவிட்டது.

இதனால் திமுகவிற்கு அளித்த ஆதரவை இருவரும் திரும்பப் பெற்றுள்ளனர். தங்களுக்கு இடம் வழங்காததே ஆதரவை திரும்பப் பெற்றுக் கொண்டதற்கு காரணமாக தெரிவித்துள்ளனர்.