திமுகவிற்கு பெருகும் ஆதரவு - நடிகர் கருணாஸை தொடர்ந்து திமுக பக்கம் தாவிய தமிமூன் அன்சாரி
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி நடைபெற உள்ளது. இதனால் தமிழகத்தில் அரசியல் களம் தற்போது சூடு பிடித்திருக்கிறது. அனைத்து அரசியல் கட்சிகளும் கூட்டணி, தொகுதிப் பங்கீடு, வேட்பாளர் நேர்காணல் என ஆகியவற்றில் தீவிரம் காட்டி வருகிறார்கள். சில கட்சிகளில் தொகுதிப் பங்கீட்டில் இழுபறி நீடித்துக் கொண்டே இருக்கிறது.
இந்நிலையில், திமுகவுக்கு ஆதரவு தெரிவித்து மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதியிடம் கடிதம் கொடுத்துள்ளார். சற்று நேரத்திற்கு முன்புதான் சட்டமன்ற தேர்தலில் நடிகர் கருணாஸின் முக்குலத்தோர் புலிப்படை திமுகவிற்கு ஆதரவு அளிப்பதாக அக்கட்சியின் இளைஞர் அணி செயலர் அஜய் வாண்டையார் அண்ணா அறிவாலயத்தில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பாரதியிடம் கடிதம் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த தேர்தலில் அதிமுக கூட்டணியில் இரட்டை இலை சின்னத்தில் நின்ற தமீமுன் அன்சாரி, கருணாஸ் ஆகியோர் தற்போது திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் தணியரசும் திமுக கூட்டணி பக்கம் திரும்ப வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.