பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு தாமரை பெற்ற சம்பளம் இதுதானா? - அதிர்ச்சியில் ரசிகர்கள்
பிக்பாஸில் பங்கேற்ற தாமரை செல்விக்கு கொடுக்கப்பட்டுள்ள சம்பளம் பற்றிய தகவல் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் கமல் தொகுத்து வழங்க விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5வது சீசன் இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. சின்னத்திரையிலேயே பிரமாண்ட ரியாலிட்டி ஷோவாக கருதப்படும் பிக்பாஸ் சீசன் 5-ல் யாரெல்லாம் பங்கேற்க போகிறார்கள் என்று ஆவலுடன் காத்திருந்த ரசிகர்களுக்கு இசைவாணி, ராஜு ஜெயமோகன், மதுமிதா, அபிஷேக் ராஜா, நமீதா மாரிமுத்து, பிரியங்கா, அபிநய் , சின்ன பொண்ணு, பாவனி, நாடியா சங், வருண், இமான் அண்ணாச்சி, ஐக்கி பெர்ரி, ஸ்ருதி, அக்ஷரா, தாமரை செல்வி, சிபி சந்திரன், நிரூப் நந்தகுமார் ஆகிய 18 பேர் பங்கேற்றது ஆர்வத்தை அதிகப்படுத்தியது.
வழக்கம் போல போட்டியாளர்களுக்குள் ஏற்பட்ட பல பஞ்சாயத்துக்கள் ஒருகட்டத்தில்பிக்பாஸ் சீசன் 5-ஐ சுவாரஸ்யமாக்கியது. இதனிடையே ஒவ்வொரு வாரமும் ஒரு போட்டியாளர்கள் வீதம் வெளியேற்றப்பட்ட நிலையில், பிக்பாஸ் வீட்டிலிருந்து கடந்த வாரம் மேடை நாடக கலைஞரான தாமரை செல்வி வெளியேற்றப்பட்டார். சுமார் 98 நாட்கள் பிக்பாஸ் வீட்டில் தாக்குப்பிடித்த தாமரை பிக்பாஸை விட்டு வெளியேறியது அவரது ஆதரவாளர்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
இதனிடையே பிக்பாஸில்பங்கேற்ற தாமரை செல்விக்கு கொடுக்கப்பட்டு உள்ள சம்பளம் பற்றிய தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது. தகவலின் படி வாரத்திற்கு ரூ.70 ஆயிரம் என தாமரைக்கு சம்பளம் பேசப்பட்டு உள்ளது. இதன்படி சுமார் 14 வாரங்கள் போட்டியில் நிலைத்த தாமரைக்கு ரூ.9,80,000 சம்பளம் வந்துள்ளதாவும், இந்த சம்பளத்தில் 30% வரி பிடித்தம் செய்யப்பட்டு மீதி பணம் அவருக்கு கொடுக்கப்பட்டு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறன. இதற்கு பேசாமல் தாமரை அந்த ரூ.12 லட்சம் அடங்கிய பெட்டியை எடுத்து கொண்டு பிக்பாஸை விட்டு வெளியேறி இருக்கலாமே என்று அவரது ஆதரவாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.