பிக்பாஸ் தாமரை செல்விக்கு அடித்த ஜாக்பாட் வாய்ப்பு - ஆச்சரியத்தில் ரசிகர்கள்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர் தாமரை செல்விக்கு மீண்டும் விஜய் டிவி வாய்ப்பு ஒன்றை வழங்கவு்ள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

நாடக நடிகையான தாமரைசெல்வி பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட புதுமுக  சாமானியப் பெண் ஆவார். ஆரம்பத்தில் விளையாட்டை புரியவில்லை என்று சொல்லிக்கொண்டிருந்த அவர் 99 நாட்கள் அந்த வீட்டில் இருந்து சாதனைப் படைத்தார். வீட்டுவேலைகள் முதல் பிக் பாஸ் கொடுக்கும் டாஸ்க்குகள் வரை எல்லா போட்டிகளிலும் கலந்து கொண்டு, யாருக்கும் பயமின்றி தன்னுடைய கருத்துகளை முன்வைத்த தாமரை இறுதிப்போட்டியில் ஃபைனலிஸ்ட்டாக கலந்து கொள்வார் என்று பலரும் எதிர்பார்த்துக் காத்திருந்தனர்.

அதேபோல் பிக்பாஸ் அவருக்கு வழங்கிய சம்பளம் கடனை அடைக்க போதாது என்றும் அவர் குறிப்பிட்டிருந்த நிலையில் பிக்பாஸ் பணப்பெட்டி டாஸ்க்கில் ரூ.12 லட்சத்தை எடுத்துக் கொண்டு வெளியேறாதது பல தரப்பிலும் பாராட்டை பெற்று தந்தது. 

ஆனால் எதிர்பாராதவிதமாக தாமரைச்செல்வி இறுதி வாரத்திற்கு முன்பு பிக்பாஸ் 5 சீசனின் கடைசி போட்டியாளராக வெளியேற்றப்பட்டார். இதற்கு பலரும் அதிருப்தி தெரிவித்துள்ள நிலையில் அவருடைய ரசிகர்களுக்கு மற்றொரு ஆச்சரியமான செய்தி காத்திருக்கிறது. தற்போது மீண்டும் விஜய் டிவி நிகழ்ச்சியில் தாமரைசெல்வி கலந்து கொள்ளப் போகிறார் என்கிற செய்தி வெளியாகியுள்ளது.

இன்னும் சில வாரங்களில் தொடங்க இருக்கும் குக் வித் கோமாளியின் மூன்றாம் சீஸனில் தாமரைச்செல்வியும் ஒரு போட்டியாளராக கலந்து கொள்ளப் போபோகிறார் என்றும்,  பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போதே அவர் அருமையாக சமைப்பார் என சொல்லப்பட்டது. எனவே இவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு பொருத்தமான போட்டியாளராக என்று பலரும் கருத்துக்களை தெரிவித்து வந்ததனர். 

மேலும் குக் வித் கோமாளி வாய்ப்பு கிடைப்பதோடு மட்டுமல்லாமல் விஜய் டிவியின் பல்வேறு நிகழ்ச்சிகளிலும் தாமரை செல்வி கலந்து கொள்வார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

You May Like This


உலகின் அனைத்துப் பாகங்களிலும் இடம் பெறும் வெளிநாட்டு - உள்நாட்டு அரசியல், சினிமா மற்றும் பொருளாதாரத்தை உடனுக்குடன் அறிந்து கொள்ள லங்காசிறிக் குழுமத்துடன் இணைந்திருங்கள்