செம்ம ரொமான்ஸ் போல..மாடர்ன் உடையில் கணவருடன் தாமரை - வைரல் வீடியோ..!
மாடர்ன் உடையில் கணவருடன் தாமரை நடனமாடிய வீடியோ வேகமாக பரவி வருகிறது.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்று வரும் நிகழ்ச்சி பிக்பாஸ் ஜோடிகள்.

இதில் பிக்பாஸ் 5 சீசன்களிலும் கலந்துகொண்ட பிரபலங்கள் ஜோடியாக இணைந்து போட்டியாளர்களாக பங்கேற்றுள்ளனர்.
நடனத் திறமையை வெளிப்படுத்தும் வகையில் நடைபெறும் இந்நிகழ்ச்சியில் முதல் சீசனில் அனிதா சம்பத் மற்றும் ஷாரிக் வெற்றி பெற்றனர்.
தற்போது இரண்டாவது சீசனில் ஐக்கி பெரி அவரது காதலர் தேவ், இசைவாணி- வேல்முருகன், அபிஷேக்- ஸ்ருதி, கணேஷ்கர்- ஆர்த்தி தம்பதியினர், அமீர்- பாவனி, சுஜா வருணி- சிவகுமார் ஜோடி , தாமரை அவரது கணவர் பார்த்தசாரதி ஆகியோர் போட்டியாளர்களாக களமிறங்கியுள்ளனர்.
இந்நிகழ்ச்சிக்கு ரம்யா கிருஷ்ணன் மற்றும் நடன இயக்குனர் சதீஷ் நடுவர்களாக உள்ளனர். இந்த நிலையில் தற்போது வரும் வாரத்திற்கான ப்ரோமோ வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.
கிராமம் வெர்சஸ் சிட்டி ரவுண்ட் நடைபெறுகிறது. அதில் தாமரை செம்ம மாடர்னாக உடையணிந்து கணவருடன் ரொமான்டிக்காக நடனமாடியுள்ளார். அந்த வீடியோ பரவி எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.