கமல்ஹாசனையெல்லாம் என்னால் பாராட்ட முடியாது? மேடையில் ஓப்பனாக பேசிய விஜய்!

Kamal Haasan Vijay Tamil Cinema Tamil Actors
By Jiyath Aug 07, 2023 01:08 AM GMT
Report

நடிகர் கமல்ஹாசனை புகழ்ந்து பேசியுள்ளார் நடிகர் விஜய்.

தசாவதாரம்

கடந்த 2008ம் ஆண்டு இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளிவந்த படம் தான் தசாவதாரம். இதில் கமல்ஹாசன் 10 வேடங்களில் நடித்திருப்பார். இந்தப்படம் வெளிவந்து பெரும் வெற்றி பெற்றது. நல்ல வசூலையும் குவித்தது.

கமல்ஹாசனையெல்லாம் என்னால் பாராட்ட முடியாது? மேடையில் ஓப்பனாக பேசிய விஜய்! | Thalapathy Vijay Speak About Kamalhassan Ibc

அப்போது இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது. அந்த விழாவில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி, ஹாலிவுட் நடிகர் ஜாக்கி சான், கோலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன், தளபதி விஜய் உள்ளிட்ட பிரபலங்கள் கலந்து கொண்டனர். இதை தொடர்ந்து நடிகர் விஜய்யை மேடையில் பேச அழைத்தனர்.

விஜய் பேச்சு

அதில் நடிகர் விஜய் பேசியதாவது 'நாங்கலாம் ஏதாவது கதாபாத்திரம் பண்ணும்போது, அதாவது ஒரு காவல் துறை அதிகாரியோ, வக்கீலோ, டாக்டரோ அல்லது ஒரு தாதா கதாபாத்திரமோ நடிக்கும்போது அந்த துறைகளில் சிறந்தவர்களிடம் சென்று அவர்களுடைய நடை,உடை,பேச்சு எல்லாவற்றையும் கற்றுக் கொண்டு அதை திரையில் கொண்டு வருவதற்கு முயற்சி செய்வோம்.

கமல்ஹாசனையெல்லாம் என்னால் பாராட்ட முடியாது? மேடையில் ஓப்பனாக பேசிய விஜய்! | Thalapathy Vijay Speak About Kamalhassan Ibc

ஆனால் உதாகரணத்திற்கு கமல்ஹாசன் ஒரு காவல்துறை கதாபாத்திரம் நடித்தால் ஊரில் இருக்கக் கூடிய அனைத்து காவல்துறை அதிகாரிகளும் அந்த படத்தை பார்த்துவிட்டு ஒரு காவல் துறை அதிகாரி கெத்தாக இப்படித்தான் இருக்க வேண்டும் என்று கமல்ஹாசனை பார்த்து கற்றுக்கொள்வார்கள் என்று என்னுடைய நண்பர் ஒருவர் கூறினார். மேலும் பேசிய விஜய் 'கமல் சாரை நான் பாராட்ட வேண்டும், ஆனால் நான் பாராட்டப்போவதில்லை.

கமல்ஹாசனையெல்லாம் என்னால் பாராட்ட முடியாது? மேடையில் ஓப்பனாக பேசிய விஜய்! | Thalapathy Vijay Speak About Kamalhassan Ibc

ஏனெனில் என்னதான் புத்திசாலியான மாணவனாக இருந்தாலும் வாத்தியாரை வாழ்த்தி ஒன்றுமில்லை. அவருடைய கடமை எங்கள் எல்லோருக்கும் சொல்லிக் கொடுப்பது. எங்களுடைய வேலை அதை ரசித்துக்கொண்டே கற்றுக்கொள்வது.

தசாவதாரம் படம் ஒரு வருடம் ஓடவேண்டும் என்று வாழ்த்துகிறேன் என்று கமல் ஹாசனை தளபதி விஜய் அந்த மேடையில் புகழ்ந்து தள்ளியிருப்பார்.