இயற்கையின் அழகை ரசித்தபடி! வைரலாகும் விஜய்யின் ஒற்றை புகைப்படம்

By Fathima Dec 04, 2021 12:36 PM GMT
Report

இளைய தளபதியும், முன்னணி நடிகருமான விஜய்யின் சமீபத்திய புகைப்படம் வைரலாகி வருகிறது.

நடிகர் விஜய்யின் லேட்டஸ்ட் புகைப்படம் ட்விட்டரில் வைரலாகி வருகிறது.  

முதன்முறையாக விஜய் நடிகராக அறிமுகமான 'நாளையத்தீர்ப்பு' படம் கடந்த 1992 ஆம் ஆண்டு டிசம்பர் 4ம் தேதி வெளியானது.

இன்றுடன் 29 ஆண்டுகள் நிறைவடைந்து, 30ம் ஆண்டுக்குள் அடியெடுத்து வைப்பதை விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில், ப்ளாக் டி-சர்ட்டில் விஜய் ஆற்றில் நின்றுகொண்டு இயற்கையை ரசிக்கும் புதிய லேட்டஸ்ட் புகைப்படம் ட்விட்டரில் வைரலாகிக்கொண்டு வருகிறது.