என் மகன் நடிப்பதில் விருப்பமில்லை - தந்தை எஸ்.ஏ.சி.க்கு விஜய் கொடுத்த தரமான பதிலடி

Beast Thalapathyvijay விஜய் SAChandrasekar Beastupdate
6 மாதங்கள் முன்

ஆரம்ப காலத்தில் விஜய் நடிப்பதில் விருப்பப்படாத தந்தை எஸ்.ஏ.சந்திரசேகருக்கு தனது நடிப்பின் மூலம் பதில் அளித்துள்ளதாக விஜய் ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

தமிழ் சினிமாவின் தளபதி, வசூல் மன்னன் என அடைமொழியோடு அழைக்கப்படும் நடிகர் விஜய் என்னதான் இன்றைக்கு உச்ச நட்சத்திரமாக இருந்தாலும் இன்றளவும் தனது தந்தையால் தான் முன்னுக்கு வந்தார் என அவரது எதிர்ப்பாளர்கள் தொடர்ந்து கூறி வருகின்றனர்.

என்னதான் எஸ்.ஏ.சி. உதவியிருந்தாலும் விஜய்க்கென இருந்த தனி நடிப்பு ஸ்டைல் தான் அவரை மாஸ் ஹீரோவாக வைத்திருப்பதாக அவரது ரசிகர்களும் கூறுகின்றனர். ஆனால் நடிக்கவேண்டும் என்ற ஆசையை தன் அப்பா இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரிடம் விஜய் கூறிய போது விஜய்யை நடிக்கவேண்டாம் என்றே பதில் வந்துள்ளது. இத்தனைக்கும் எஸ்.ஏ.சி. அன்றைக்கு பிரபலமான இயக்குநர்.   

ஆனால் விஜய் விடாப்பிடியாக இருந்ததால் அரைமனதாக சம்மதித்ததால் நாளைய தீர்ப்பு படத்தின் மூலம் எஸ்.ஏ.சந்திரசேகரால் நடிகராக அறிமுகப்படுத்தப்பட்டார். முதல் நாள் படப்பிடிப்பில் கஷ்டமான காட்சியை கொடுத்தால் விஜய் பயந்து நடிப்பு வேண்டாம் என சொல்லிவிடுவார் என கருதி பக்கம் பக்கமாக வசனம் கொடுத்துள்ளார். அந்த காட்சியை ஒரே டேக்கில் விஜய் ஓகே செய்துவிட்டாராம்.

அன்றுதான் விஜய் எப்படியும் மிகப்பெரிய ஹீரோவாக வலம் வருவார் என்று முடிவெடுத்த  எஸ்.ஏ.சந்திரசேகர் அவரின் வளர்ச்சிப்பாதையில் மிக முக்கிய பங்காற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.