தளபதி விஜய் பட நடிகைக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது
தளபதி 65 படத்தின் நடிகையான பூஜா ஹெக்டேவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
நடிகர் விஜய்யின் 65 வது படத்திற்கான முதற்கட்ட பணிகள் விறுவிறுப்பாக தொடங்கியுள்ளன. கோலமாவு கோகிலா பட புகழ் இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இந்த படத்தை இயக்கி வருகிறார். மிகுந்த பொருட்செலவில் தயாராகும் இந்த படத்தில் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகை பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்கிறார்.
இதுதவிர, இந்த படத்தில் அபர்ணா தாஸ், விடிவி கணேஷ், யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.காதல், நகைச்சுவை, அதிரடி என பக்கா கமர்ஷியல் படமாக தளபதி 65 தயாராகிறது. அமெரிக்காவின் ஜியார்ஜியா மாகாணத்தில் முதற்கட்ட படப்பிடிப்பு துவங்கியது.
அங்கு மொத்தம் 10 நாட்கள் நடைபெறும் படப்பிடிப்பில் நடிகர் விஜய், பூஜா ஹெக்டே சம்மந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.சமீபத்தில் இந்த படத்தின் பூஜை சென்னையில் உள்ள சன்பிக்சர்ஸ் ஸ்டூடியோவில் நடைபெற்றது. அதன் பின்னர் படக்குழு மொத்தமும் ஜார்ஜியாவிற்கு பறந்தது. ஒரு சண்டைக் காட்சி உள்பட பல முக்கிய காட்சிகள் எடுக்கப்பட்ட நிலையில், டூயட் ஒன்றையும் படமாக்கப்பட்டதாக கூறப்பட்டது.
தற்போது படக்குழு ஜார்ஜியாவில் ஷூட்டிங்கை முடித்துக் கொண்டு சென்னை திரும்பியுள்ள நிலையில், அந்த படத்தின் நடிகையான பூஜா ஹெக்டேவிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனை பூஜா ஹெக்டேவே தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளார்.எனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் தனிமைப்படுத்திக் கொண்டதாக அறிவித்துள்ளார். தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் விரைவாக பரிசோதனை செய்யும்படி அவர் அறிவுறுத்தியுள்ளார்.