தளபதி 68ல் விஜய்க்கு ஜோடியாகும் 'மெழுகு டால்'; மகிழ்ச்சியில் ரசிகர்கள் - அப்போ ஜோதிகா?
தளபதி 68ல் நடிக்க இருக்கும் கதாநாயகி குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.
லோகேஷ் கனகராஜ்
இயக்கத்தில் விஜய் நடிக்கும் லியோ திரைப்படத்தின் இறுதி கட்ட வேலைகள் மும்முரமாக நடந்து வருகிறது. இந்த படத்தில் விஜய்யுடன் பல வருடங்களுக்கு பிறகு திரிஷா நடித்துள்ளார். மேலும் சஞ்சய்தத், அர்ஜுன், கவுதம் மேனன், மிஷ்கின், பிரியா ஆனந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்த படத்தை தொடர்ந்து சென்னை 28, சரோஜா, மங்காத்தா, மாநாடு உள்ளிட்ட பல வெற்றி படங்களை கொடுத்துள்ள இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கும் படத்தில் விஜய் நடிக்க உள்ளார். இந்த படம் ஏ.ஜி.எஸ் தயாரிப்பில் உருவாக உள்ளது. யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்படத்தின் ஆரம்ப கட்ட பணிகள் தொடங்கிவிட்டன.
ஹீரோயின்
இந்த படத்தில் விஜய் இரட்டை வேடங்களில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே இந்த படத்தில் ஜோதிகா நடிக்க இருப்பதாக கூறப்பட்டு வந்த நிலையில் மற்றொரு ஹீரோயினும் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அந்த வகையில் தமிழில் டாக்டர், டான், எதற்கும் துணிந்தவன் போன்ற படங்களில் நடித்து பிரபலமான நடிகை பிரியங்கா அருள் மோகன் தான் விஜய்க்கு ஜோடியாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இதற்கான எந்தவித அதிகார பூர்வ அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை.
December 2026 Horoscope: தொட்டதெல்லாம் வெற்றியாகும் டாப் 4 ராசிக்காரர்கள்! உங்க ராசியும் இருக்கா? Manithan
41 சிறுவர்களின் எலும்புக்கூடுகள்: ராஜ் சோமதேவவின் செம்மணி அறிக்கை..! நாடாளுமன்றில் அமைச்சரின் அறிவிப்பு IBC Tamil