‘தளபதி 67’-ல் விஜய்க்கு வில்லனாக நடிக்கும் சஞ்சய் தத்திற்கு எவ்வளவு கோடி சம்பளம்ன்னு தெரியுமா? இதோ..
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய். இவருக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. கடந்த 11ம் தேதி ‘வாரிசு’ திரைப்படம் தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. வசூல் சாதனையிலும் முன்னிலையில் உள்ளது.
விஜய்யின் ‘தளபதி - 67’
‘வாரிசு’ படத்திற்கு பிறகு நடிகர் விஜய், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘தளபதி 67’ படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தில் யார், யார் நடிக்கிறார்கள் என்பது குறித்த தகவலை படக்குழுவினர் நேற்றிலிருந்து அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு வருகின்றனர்.
அந்த வகையில், பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் இப்படத்தில் வில்லனாக நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக படக்குழுவினர் அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

நடிகர் சஞ்சய் தத்தின் சம்பளம்
இப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாக இருக்கிறார் சஞ்சய் தத். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது காஷ்மீரில் நடந்து வருகிறது. நேற்று 180 பேருடன் தனி விமானம் மூலம் படக்குழு காஷ்மீருக்கு சென்றனர். இன்று முதல் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், விஜய்யின் ‘தளபதி 67’ படத்தில் வில்லனாக நடிக்கப்போகும் சஞ்சய் தத் வாங்கிய சம்பளம் எவ்வளவு என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இப்படத்தில் நடிகர் விஜய்க்கு வில்லனாக நடிக்கும் சஞ்சய் தத்திற்கு ரூ.10 கோடி சம்பளமாக கொடுக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. வில்லனாக நடிக்க அவர் வாங்கும் அதிகபட்ச சம்பளம் இதுதானாம். சஞ்சய் தத் நடித்து வருவதால் ‘தளபதி 67’ படத்துக்கு பாலிவுட்டில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
30 வருடங்களுக்கு மேலாக மூடப்பட்டுள்ள காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையை மீள ஆரம்பிக்க திட்டம் IBC Tamil
அப்போ வெளியே தெரியாத விஷயம்... விஜய் - திரிஷா சர்ச்சை குறித்து ஓபனாக பேசிய வனிதா விஜயகுமார்! Manithan
பரபரப்பு சம்பவம்: வெள்ளை மாளிகை விருந்தில் துப்பாக்கிச் சூடு - இலக்கு வைக்கப்பட்ட ஜனாதிபதி ட்ரம்ப் IBC Tamil