விஜய்யுடன் கைக்கோர்த்த கேஜிஎஃப் பிரபலம் - உச்சக்கட்ட எதிர்பார்ப்பில் ரசிகர்கள்
நடிகர் விஜய்யின் 67வது படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
பீஸ்ட் படத்தை தொடர்ந்து நடிகர் விஜய்யின் 66 வது படத்தை தெலுங்கு இயக்குநர் வம்சி பைடிபள்ளி இயக்கி வருகிறார். தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் உருவாகும் இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனாவும், இசையமைப்பாளராக தமனும், முக்கிய கேரக்டரில் நடிகர் ஷாமும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து விஜய் நடிக்கும் 67வது படத்தை அவரின் மாஸ்டர் படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு வருகின்ற அக்டோபர் மாதம் 3 ஆம் தேதி தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில் இதில் வில்லனாக கேஜிஎஃப் பிரபலமான பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் உடன் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த 67வது படம் பான் இந்தியா படமாக உருவாக உள்ளது. ஏற்கனவே மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பு தொடங்கிய அதே நாளில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.