விஜய்யின் 66வது படத்தை இயக்கப் போவது இந்த இயக்குனரா?... வெளியான தகவலால் ரசிகர்கள் மகிழ்ச்சி...

Actor Vijay Thalapathy66
By Petchi Avudaiappan May 30, 2021 09:11 AM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in சினிமா
Report

நடிகர் விஜய் தனது 66வது படத்தில் தெலுங்கு இயக்குனருடன் இணையபோவதாக வெளியாகியுள்ள தகவல் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழும் நடிகர் விஜய் மாஸ்டர் படத்தை தொடர்ந்து தற்போது இயக்குனர் நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் பெயரிடப்படாத 65வது படத்தில் நடித்து வருகிறார். அனிருத் இசையமைப்பில் சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் ஹீரோயினாக நடிகை பூஜா ஹெக்டே நடிக்கிறார்.

இந்த நிலையில் விஜய்யின் 66வது படத்தை இயக்க போவது யார் என்ற கேள்வி கடந்த சில மாதங்களாக இருந்து வருகிறது. பல இயக்குனர்களின் பெயர்கள் பரிசீலனையில் இருந்த நிலையில் தற்போது பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி பைடி பல்லி அந்த படத்தை இயக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

சமீபத்திய பேட்டி ஒன்றில் இதனை இயக்குனர் வம்சி உறுதிப்படுத்திய தாகவும், இப்படத்தை பிரபல தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.