13 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் விஜய்க்கு வில்லனாகும் பிரபல நடிகர் - எதிர்பார்ப்பில் ரசிகர்கள்
நடிகர் விஜய்யின் 66வது படத்தில் பிரபல நடிகர்கள் இணைந்துள்ளதால் ரசிகர்கள் உச்சக்கட்ட எதிர்பார்ப்பில் உள்ளனர்.
பீஸ்ட் படத்தை தொடர்ந்து நடிகர் விஜய்யின் 66 வது படத்தை தெலுங்கு இயக்குநர் வம்சி பைடிபள்ளி இயக்கி வருகிறார். தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் உருவாகும் இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனாவும், இசையமைப்பாளராக தமனும், முக்கிய கேரக்டரில் நடிகர் ஷாமும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.
Super excited to have @prakashraaj sir onboard for #Thalapathy66.@actorvijay @directorvamshi @iamRashmika @MusicThaman @SVC_Official @Cinemainmygenes @KarthikPalanidp #TeamThalapathy66 pic.twitter.com/vpnl3BmgjA
— Sri Venkateswara Creations (@SVC_official) May 8, 2022
இந்நிலையில் இப்படத்தில் நடிகர்கள் பிரகாஷ் ராஜ், சரத்குமார், பிரபு, நடிகை ஜெயசுதா ஆகியோர் நடிப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனால் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர். இதில் பிரகாஷ்ராஜ் ஒரு காலக்கட்டத்தில் விஜய் படங்களில் ஆஸ்தான வில்லனாக நடித்தவர். இருவரும் கில்லி, போக்கிரி, சிவகாசி, வில்லு ஆகிய படங்களில் இணைந்து நடித்துள்ளனர். வில்லு படம் 2009 ஆம் ஆண்டு வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.
Delighted to have #Prabhu sir onboard for #Thalapathy66.@actorvijay @directorvamshi @iamRashmika @MusicThaman @SVC_Official @Cinemainmygenes @KarthikPalanidp #TeamThalapathy66 pic.twitter.com/MAElJd8nRR
— Sri Venkateswara Creations (@SVC_official) May 8, 2022
Privileged to have @RealSarathKumar sir onboard for #Thalapathy66.@actorvijay @directorvamshi @iamRashmika @MusicThaman @SVC_Official @Cinemainmygenes @karthikpalanidp#TeamThalapathy66 pic.twitter.com/9tYxYISbSP
— Sri Venkateswara Creations (@SVC_official) May 8, 2022