தளபதி 66 படத்தில் நடிகர் பிரபு,பிரகாஷ் ராஜ்- வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!

Prabhu
By Thahir May 08, 2022 09:10 PM GMT
Report

தளபதி 66 பட ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த தீபாவளிக்கு விஜய் படம் திரைக்கு வராது என்ற தகவல் சில ரசிகர்களை அதிருப்தி அடையச் செய்துள்ளது.

விமர்சன ரீதியில் பீஸ்ட் படம் பின்னடைவை சந்தித்துள்ள நிலையில், விஜய் நடிக்கும் அடுத்த படத்தை தெலுங்கு முன்னணி இயக்குனர் வம்சி பைடிபள்ளி இயக்கி வருகிறார்.

குடும்பக் கதையாக உருவாகி வரும் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். தளபதி 66 படத்தில் விஜய்யுடன் சரத்குமார், பிரபு, ஷாம், யோகி பாபு உள்ளிட்டோர் இணைந்துள்ளனர்.

படப்பிடிப்பு தற்போது ஐதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தளபதி 66 படப்பிடிப்பு விரைந்து முடிந்து படம் தீபாவளிக்கு திரைக்கு வரும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் தளபதி 66 அடுத்த ஆண்டு பொங்கலுக்குத்தான் திரைக்கு வரும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தகவலை தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ வெங்கேடஸ்வரா கிரியேஷன்ஸ் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

இதனால், இந்தாண்டு தீபாவளிக்கு விஜய் படம் எதுவும் திரைக்கு வராது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தளபதி 66 படத்திற்கு தெலுங்கில் முன்னணி இசையமைப்பாளராக இருக்கும் தமன் இசையமைத்துள்ளார்.

குடும்பக்கதை, காதல், ஆக்சன், சென்டிமென்ட் என அனைத்து அம்சங்களை உள்ளடக்கியதாக இந்தப் படம் உருவாகி வருகிறது.

விஜய் கடந்த சில ஆண்டுகளாக ஆக்சன் படங்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்திருந்தார். 2011-ல் வெளிவந்த நண்பன் படத்திற்கு பின்னர்,

பெரும்பாலான விஜய் படங்கள் ஆக்சன் படங்களாகவே இருக்கின்றன. இந்நிலையில் ஆக்சன் படங்களிலிருந்து வித்தியாசமான முறையில் தளபதி 66 படம் உருவாகி வருகிறது.