விஜய்யின் 66-வது பட வெளியீட்டு தேதி அறிவிப்பு - ரசிகர்கள் உற்சாகம்!

Vijay Rashmika Mandanna
By Swetha Subash May 09, 2022 05:47 AM GMT
Swetha Subash

Swetha Subash

in சினிமா
Report

பீஸ்ட் படத்தை தொடர்ந்து நடிகர் விஜய்யின் 66-வது படத்தை தெலுங்கு இயக்குநர் வம்சி பைடிபள்ளி இயக்கி வருகிறார்.

தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் உருவாகும் இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனாவும், இசையமைப்பாளராக தமனும், முக்கிய கேரக்டரில் நடிகர் ஷாமும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இப்படத்தில் நடிகர்கள் பிரகாஷ் ராஜ், சரத்குமார், பிரபு, நடிகை ஜெயசுதா ஆகியோர் நடிப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இதனால் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர். இதில் பிரகாஷ்ராஜ் ஒரு காலக்கட்டத்தில் விஜய் படங்களில் ஆஸ்தான வில்லனாக நடித்தவர்.

இருவரும் கில்லி, போக்கிரி, சிவகாசி, வில்லு ஆகிய படங்களில் இணைந்து நடித்துள்ளனர். வில்லு படம் 2009-ம் ஆண்டு வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

விஜய்யின் 66-வது பட வெளியீட்டு தேதி அறிவிப்பு - ரசிகர்கள் உற்சாகம்! | Thalapathy 66 Film To Be Released On Pongal 2023

காதல் கதையை மையமாக வைத்து உருவாகி வரும் இப்படம் அடுத்த வருடம் பொங்களுக்கு ரிலீஸ் ஆகும் என படக்குழு அறிவித்துள்ளது.

மேலும் படம் குறித்து பேசியுள்ள இசையமைப்பாளர் தமன், ‘தளபதி 66’ தனது கெரியரில் மிக்க முக்கியத்துவம் மற்றும் பெஸ்ட் ஆல்பமாக அமையும் என குறிப்பிட்டுள்ளார்.