"என்ன நண்பா ரெடியா?" - விஜய் பிறந்தநாளில் காத்திருக்கும் சர்ப்ரைஸ்

Sun pictures Thalapathy 65 First look poster
By Petchi Avudaiappan Jun 18, 2021 01:36 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in சினிமா
Report

நடிகர் விஜய் நடிக்கும் தளபதி 65 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.

மாஸ்டர் படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கும் படத்தில் நடிக்க உள்ளார். விஜய்யின் 65வது படமாக உருவாகும் இதனை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க அனிருத் இசையமைக்கிறார்.

விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே ஒப்பந்தமாகியுள்ளார். படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில் கோரோனா காரணமாக அடுத்தக்கட்ட படப்பிடிப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் ஜூன் 22ஆம் தேதி விஜயின் பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு தளபதி 65 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.