வாக்களித்த கையோடு ஜார்ஜியா பறந்தார் தளபதி விஜய்
தளபதி விஜய் அவர்கள் தனது 65வைத்து படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ள ஜார்ஜியா சென்றதாக தகவல் வெளியாகியுள்ளன. தமிழக சட்டமன்ற தேர்தல் நேற்று நடைபெற்றது. இதில் சாதாரண பொதுமக்கள் முதல் திரை பிரபலங்கள்,அரசியல் வாதிகள் உள்பட பலரும் வாக்களித்தனர்.
இதில் குறிப்பாக சினிமா நட்சத்திரங்களான தல மற்றும் தளபதி அவர்கள் வாக்களிக்க வந்த விதம் பெரும் பேசுபொருளாக மாறியது. குறிப்பாக தளபதி விஜய் அவர்கள் தனது வீட்டில் இருந்து சைக்கிளில் சென்று வாகு செலுத்தினார். அந்த சமயத்தில் ரசிகர்கள் அவரை சூழ்ந்துகொண்டு புகைப்படங்களும் எடுத்தனர்.
பிறகு தனது உதவியாளரின் வாகனத்தில் தளபதி விஜய் அவர்கள் வீடு திரும்பினார். இந்த காணொளிகள் அனைத்தும் சமூக வலைத்தளத்தில் செம வைரலானது. இந்நிலையில் தேர்தலில் வாக்களித்த கையோடு நடிகர் விஜய் நேற்று இரவு தனது 65வது படத்தின் படப்பிடிப்பிற்காக ஜார்ஜியா சென்றார்.
இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். மேலும் மாஸ்டர் படத்திற்கு இசை அமைத்த இசையமைப்பாளர் அனிரூத் இந்த படத்திற்கும் இசை அமைக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.