வெளியானது ‘தலைவர்169’ படத்தின் அதிகாரப்பூர்வ அப்டேட்
தமிழ் சினிமாவில் உச்ச நடிகர்களுல் ஒருவராக இருப்பவர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்.
தமிழ் திரையுலகை தாண்டி இந்திய அளவில் ஏன் உலக அளவில் அறியப்பட்டு தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர் ரஜினிகாந்த்.
இவர் கடைசியாக சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்த படத்தில் நடித்திருந்தார்.
அடுத்ததாக சூப்பர்ஸ்டார் எந்த இயக்குனரோடு கூட்டணி அமைக்க போகிறார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் பெருமளவு இருந்துவந்த நிலையில் அந்த அப்டேட் குறித்த பிரோமோ வீடியோவை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
இதன் மூலம் அண்ணாத்த படத்தை தொடர்ந்து தலைவர் 169 படத்தையும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பது உறுதியாகியுள்ளது.
மேலும், ரஜினியின் 169-வது படமான இந்த படத்தை டாக்டர் படம் இயக்கிய நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார், படத்திற்கு இளம் இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார்.
புதன் - சனி சேர்க்கையால் உருவாகும் நவபஞ்சம யோகம்: நாளை முதல் இந்த ராசிகளின் வாழ்க்கையே மாறப்போகுது! Manithan
அதிக நம்பிக்கை துரோகங்களை சந்திப்பவர்கள் இந்த தேதிகளில் பிறந்தவர்கள் தானாம்! ஏன்னு தெரியுமா? Manithan