கடும் கோபத்தில் ரஜினிகாந்த்... அதிர்ச்சியில் ரசிகர்கள்.. என்ன நடந்தது?

Rajinikanth Anirudh Ravichander Nelson Dilipkumar
By Petchi Avudaiappan May 21, 2022 12:20 AM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in சினிமா
Report

நடிகர் ரஜினியின் 169 வது படத்தின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி ரசிகர்களை மகிழ்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. 

அண்ணாத்த படத்தை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் அடுத்ததாக தனது 169வது படத்தில் இயக்குநர் நெல்சன் திலீப்குமாருடன் இணையவுள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்த படத்தை ஆரம்பிப்பதற்கான பணிகள் நடைபெற்று வரும் நிலையில் விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க வைக்க ஐஸ்வர்யாராயிடமும், மற்றொரு நாயகியாக பிரியங்கா மோகனிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. அதேபோல் தலைவர் 169 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க நடிகை ரம்யா கிருஷ்ணனிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் வெளியானது. இந்நிலையில் படத்திலிருந்து சில புகைப்படங்கள் தற்போது வெளியாகி இணையத்தில் வைரலாகியுள்ளது. 

அதில் ரஜினி கெத்தாக கோபத்துடன் இருப்பது போல காட்சிகள் இருப்பதால் நிச்சயம் இப்படம் ரசிகர்களை கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.