“வயசானாலும் அந்த கெத்து குறையவே இல்லை” - ரஜினி செய்த சூப்பரான சாதனை

Rajinikanth anirudh sunpictures thalaivar169 nelsondhilipkumar
By Petchi Avudaiappan Mar 26, 2022 05:00 AM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in பிரபலங்கள்
Report

நடிகர் ரஜினியின் அடுத்தப்பட அறிவிப்பு படம் எடுப்பதற்கு முன்னாடியே மிகப்பெரிய சாதனை ஒன்றை படைத்துள்ளளது. 

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் என கொண்டாடப்படும் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்தாண்டு தீபாவளிக்கு அண்ணாத்த படம் வெளியானது. சிவா இயக்கிய இப்படத்தில் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பூ,மீனா, ஜெகபதி பாபு,  சூரி, சதீஷ் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். சன்பிக்சர்ஸ் தயாரித்த அனிருத் இசையமைத்த இப்படம் ரஜினி ரசிகர்களிடையே பெரிய ஏமாற்றத்தைக் கொடுத்தது. 

ஆனால் இப்படம் வசூலில் மாபெரும் சாதனைப் படைத்தது. இதனைத் தொடர்ந்து தனது 169வது படத்தை ரசிகர்களை திருப்திபடுத்தும் வகையில் இருக்க வேண்டும் என எண்ணிய ரஜினி இளம் இயக்குநர்களிடம் தொடர்ந்து கதைக்கேட்டு வந்தார். இதனைத் தொடர்ந்து கடந்த மாதம் சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் அனிருத் இசையமைப்பில், நெல்சன் இயக்கத்தில் ரஜினி தனது 169 வது படத்தில் நடிக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியானது. 

இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பினை கிளப்பியுள்ளது. இதுதொடர்பாக ரஜினி, நெல்சன், அனிருத் இடம்பெற்ற பட அறிவிப்பு குறித்த மோஷன் போஸ்டர் ஒன்று வெளியானது. இந்நிலையில் இந்த வீடியோ தென்னிந்தியாவில் வெளியான பட அறிவிப்புகளிலே நான்கு கோடி லைக்குகளை குவித்து புதிய சாதனை படைத்துள்ளது.