ரஜினியின் அடுத்தக்கட்ட முடிவு - இன்று வெளியாகிறதா அறிவிப்பு?

Rajinikanth nelson annaththe beast thalaivar169
By Petchi Avudaiappan Feb 09, 2022 11:16 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in சினிமா
Report

நடிகர் ரஜினியின் புதிய படம் குறித்த அறிவிப்பு இன்று வெளியாகலாம் என தகவல் வெளியாகியுள்ளது. 

சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த அண்ணாத்த திரைப்படம் தீபாவளிக்கு திரையரங்கில் வெளியாகி ரசிகர்களிடையே கலவையான விமர்சனத்தைப் பெற்றது. தற்போது ஓய்வில் இருந்து வரும் அவர் தனது மூத்த மகள் ஐஸ்வர்யா- நடிகர் தனுஷ் விவாகரத்து நிகழ்வால் மிகுந்த மன வருத்தத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. 

இதிலிருந்து மீள மீண்டும் படங்களில் நடிக்க முடிவு செய்துள்ள ரஜினி அதற்காக வெங்கட் பிரபு, நெல்சன், தேசிங் பெரியசாமி ஆகிய இயக்குநர்களிடம் கதை கேட்டதாக தெரிகிறது. மேலும் கடந்தாண்டு  ரஜினி பிறந்தநாள் அன்று அவரின் 169வது படம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், அது வெளியாகவில்லை. 

இந்நிலையில் ரஜினியின் அடுத்த படத்தை நெல்சன் இயக்கவுள்ளதாகவும், அனிருத் இசையமைக்கவுள்ளதாகவும், இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுகுறித்த அப்டேட் இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.