மின்சார கண்ணா வயசானாலும் உன் அழகு மாறல...ரஜினி பிறந்த நாளில் தோனிக்கு சர்ப்ரைஸ் கொடுத்தது சிஎஸ்கே

rajinikanth thala dhoni csk surprises msd tweet goes viral
By Swetha Subash Dec 12, 2021 11:32 AM GMT
Swetha Subash

Swetha Subash

in இந்தியா
Report

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ட்விட்டர் பக்கத்தில் தோனியின் புதிய படம் ஒன்று பதிவிடப்பட்டுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி தொடர்பான விஷயம் என்றால் அது சமூக வலைதளங்களில் எப்போதும் வைரல் தான்.

அதிலும் குறிப்பாக அந்த விஷயத்தை சென்னை சூப்பர் கிங்ஸ் கணக்கு போட்டால் அது மெகா ஹிட் தான்.அந்த வகையில் தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சார்பில் ஒரு புதிய படம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

அந்தப் பதிவில் தல மகேந்திர சிங் தோனியின் படம் ஒன்றை சிஎஸ்கே கணக்கு பதிவிட்டுள்ளார். மேலும் அப்பதிவில், ‘மின்சார கண்ணா’ என்ற வசனத்தையும் பதிவிட்டுள்ளது.

தமிழ்திரைப்பட நடிகர் ரஜினிகாந்த இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். முதலில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் பதிவு ஒன்றை சிஎஸ்கே பதிவிட்டிருந்தது.

அந்தப்பதிவில், "சிங்கப்பாதையை தேர்வு செய்தது முதல் பல விசில் பறக்கும் தருணங்களை தந்து வரை எப்போதும் எங்களின் உள்ளங்களில் இருக்கும் ஒரு தலைவர். பிறந்தநாள் வாழ்த்துகள் " எனப் பதிவிட்டுள்ளது.

அதைத் தொடர்ந்து தற்போது அவருடைய படையப்பா படத்தில் வரும் வசனத்தை வைத்து தோனியின் புதிய படத்தை சிஎஸ்கே பதிவிட்டுள்ளது.

சிஎஸ்கேவின் இந்த புதிய பதிவை பலரும் லைக் செய்து ஷேர் செய்து வருகின்றனர். மேலும் பலரும் இந்தப் பதிவி ரிட்வீட் செய்து தங்களுடைய கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.