தலைமன்னார்- தனுஷ்கோடி! கடலில் நீந்தி சாதனை படைத்த தம்பதி

Rameswaram
By Fathima May 07, 2026 05:36 AM GMT
Report

இலங்கை தலைமன்னாரில் இருந்து ராமநாதபுரம் தனுஷ்கோடி வரை 28 கி.மீ தூர பகுதியை நீந்தி சாதனை படைத்துள்ளனர் பெங்களூரை சேர்ந்த தம்பதியினரான டேனிசன்- விருஷாலி தம்பதி.

பெங்களூருவில் சாப்ட்வேர் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகின்றனர் டேனிசன்- விருஷாலி தம்பதி.

இவர்கள் நேற்று முன்தினம் ராமேஸ்வரத்தில் இருந்து பயிற்சியாளர் உட்பட 10க்கும் மேற்பட்டோருடன் படகு மூலமாக இலங்கை தலைமன்னார் புறப்பட்டு சென்றனர்.

தலைமன்னார்- தனுஷ்கோடி! கடலில் நீந்தி சாதனை படைத்த தம்பதி | Thalaimannar To Dhanushkodi Bangalore Couple

தொடர்ந்து அதிகாலை 4.30 மணிக்கு டேனிசன்- விருஷாலி தம்பதியினர் நீந்த தொடங்கினர், பிற்பகல் 3.15 மணியளவில் தனுஷ்கோடி அரிச்சல் முனைக்கு வந்து சேர்ந்தவர். 28 கி.மீ தூரத்தை 11 மணிநேரம் 15 நிமிடத்தில் கடந்து சாதனை படைத்துள்ளனர், ஜோடியாக இருவரும் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளனர்.

தனுஷ்கோடி கடலில் பலத்த காற்றுடன் கடல் சீற்றமும் இருந்ததாக கூறும் தம்பதியினர் சாதனை நிகழ்த்தியதை நினைத்து மகிழ்வதாகவும் தெரிவித்துள்ளனர்.