ஆட்டோவில் சென்ற தல..பார்த்து ரசித்த ரசிகர்கள்

ajith movie thala valiami
By Jon Mar 21, 2021 01:24 PM GMT
Report

  தல அஜித் அவர்கள் எளிமையாக ஆட்டோவில் செல்லும் காட்சி தற்போது வைரலாகி வருகிறது. ‘நேர்கொண்ட பார்வை’ வெற்றிக்குப்பிறகு அஜித்,ஹெச்.வினோத், போனி கபூர் கூட்டணி ‘வலிமை’ படத்தில் இணைந்துள்ளது. அஜித்துக்கு ஜோடியாக ஹீமா குரேஷி நடிக்கிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.

இந்நிலையில், அஜித் சாலையில் ஆட்டோவில் செல்லும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. சமீபதில் வெளியான புகைப்படங்களில் இருந்த கெட்டப்பிலேயே ஆட்டோவில் அஜித் இருக்கிறார் என்பதால் இந்த வீடியோ சமீபத்தில் எடுத்தது தான்.

இதனை எளிமையின் சிகரம் என்று ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.