"கேப்டன் 7" அனிமேஷன் தொடரில் நடிக்கிறார் தல தோனி!

dhoni csk thala captain7 animated
By Jon Apr 10, 2021 03:28 AM GMT
Report

அனிமேஷன் தொடரில் இந்திய கேப்டன் தோனி நடித்து வருகிறார். அந்த அனிமேஷன் தொடருக்கு கேப்டன்-7 என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. அந்தத் தொடரை, தோனியும், அவரது மனைவி சாக்ஷியும் இணைந்து தயாரிக்கிறார்கள். இது குறித்து தனது டுவிட்ட பக்கத்தில் இந்திய கிரிக்கெட் வீரர் தோனி வெளியிட்டுள்ள பதிவில், கிரிக்கெட் தவிர என் வாழ்க்கையில் இடம்பெற்ற மற்ற விருப்பங்கள் குறித்து இந்த தொடரில் இடம்பெற்றிருக்கிறது.

இந்த தொடர் அடுத்த ஆண்டு வெளியாகும். நீங்கள் தோனியை இதுவரை பார்த்திடாத வகையில் புனைவாக இந்த தொடருக்கான கதை உருவாக்கப்பட்டு வருகிறது. உளவு பார்க்கும் வகையில் இந்த தொடரின் கதை அமைக்கப்பட்டு வருகிறது. கிரிக்கெட் மட்டுமல்லாது எனது பிற ஆர்வங்களையும் இந்த தொடர் உயிர்ப்பிக்கும் என நினைக்கிறேன். இதன் கதை அருமையாக உள்ளது என்று பதிவிட்டுள்ளார்.