சிஎஸ்கே விளம்பரத்தில், புது கெட்-அப்’இல் காட்சியளிக்கும் தல தோனி - இணையத்தை தெறிக்கவிடும் புகைப்படங்கள்

cskthaladhoninewlook dhoniappearsinkakhishirtpant dhoniiniplcskad
By Swetha Subash Feb 27, 2022 08:25 AM GMT
Report

ஐ.பி.எல் தொடருக்காக தல தோனி போட்டுள்ள புதிய கெட்-அப்பின் புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகிறது.

நடப்பாண்டு ஐ.பி.எல் தொடருக்கான போட்டிகள் வரும் மார்ச் 26-ம் தேதி முதல் மே 29-ம் தேதி வரை நடைபெறும் எனவும் கொரோனா காரணமாக அனைத்து போட்டிகளும் மகாராஷ்டிரா மற்றும் புனேவில் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சிஎஸ்கே விளம்பரத்தில், புது கெட்-அப்’இல் காட்சியளிக்கும் தல தோனி - இணையத்தை தெறிக்கவிடும் புகைப்படங்கள் | Thala Dhoni New Look For Csk Ad 2022 Goes Viral

வழக்கமாக ஐ.பி.எல் போட்டிகள் வந்தாலே ரசிகர்கள் படு குஷி ஆகிவிடுவார்கள், எதிர்பார்ப்புகளும் ஏகபோகத்திற்கு இருக்கும்.

அதுவும் ஒவ்வொரு ஆண்டும் சிஎஸ்கே கேப்டன் தல தோனி புதுமையான கெட்-அப் மற்றும் ஹேர் ஸ்டைல்களில் காட்சியளித்து ரசிகர்களை குஷி படுத்துவார்.

அந்த வகையில் இந்தாண்டும் எந்த கெட்-அப்-இல் தல தரிசனம் தர போகிறார் என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர்.

இந்நிலையில் அவரின் புதிய கெட்- அப் கொண்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

அதில் அவர் அதிக தலைமுடியுடன், காக்கிச்சட்டை பேண்ட் அணிந்துக்கொண்டு பஸ் ஓட்டுநர் போன்று காட்சி தருகிறார்.

அவர் இந்த கெட்-அப்-ஐ ஐபிஎல் தொடரின் விளம்பரத்திற்காக செய்துக்கொண்டுள்ளார்.

ஒளிபரபரப்பு நிறுவனமான ஸ்டார் ஸ்போர்ட்ஸ் இப்போது முதலே ஐபிஎல்-கான விளம்பர பணிகளை தொடங்கியுள்ளது.

விரைவில் தல தோனி நடித்துள்ள முழு விளம்பர படத்தின் வீடியோவும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.