சிஎஸ்கே விளம்பரத்தில், புது கெட்-அப்’இல் காட்சியளிக்கும் தல தோனி - இணையத்தை தெறிக்கவிடும் புகைப்படங்கள்
ஐ.பி.எல் தொடருக்காக தல தோனி போட்டுள்ள புதிய கெட்-அப்பின் புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகிறது.
நடப்பாண்டு ஐ.பி.எல் தொடருக்கான போட்டிகள் வரும் மார்ச் 26-ம் தேதி முதல் மே 29-ம் தேதி வரை நடைபெறும் எனவும் கொரோனா காரணமாக அனைத்து போட்டிகளும் மகாராஷ்டிரா மற்றும் புனேவில் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
வழக்கமாக ஐ.பி.எல் போட்டிகள் வந்தாலே ரசிகர்கள் படு குஷி ஆகிவிடுவார்கள், எதிர்பார்ப்புகளும் ஏகபோகத்திற்கு இருக்கும்.
அதுவும் ஒவ்வொரு ஆண்டும் சிஎஸ்கே கேப்டன் தல தோனி புதுமையான கெட்-அப் மற்றும் ஹேர் ஸ்டைல்களில் காட்சியளித்து ரசிகர்களை குஷி படுத்துவார்.
அந்த வகையில் இந்தாண்டும் எந்த கெட்-அப்-இல் தல தரிசனம் தர போகிறார் என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர்.
இந்நிலையில் அவரின் புதிய கெட்- அப் கொண்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
Cue the ???, 'cause he is ? in a new avatar!
— Star Sports (@StarSportsIndia) February 26, 2022
How did you react to #DhonisNewLook? Let us know with an emoji! pic.twitter.com/Kv6qMr6iz5
அதில் அவர் அதிக தலைமுடியுடன், காக்கிச்சட்டை பேண்ட் அணிந்துக்கொண்டு பஸ் ஓட்டுநர் போன்று காட்சி தருகிறார்.
அவர் இந்த கெட்-அப்-ஐ ஐபிஎல் தொடரின் விளம்பரத்திற்காக செய்துக்கொண்டுள்ளார்.
ஒளிபரபரப்பு நிறுவனமான ஸ்டார் ஸ்போர்ட்ஸ் இப்போது முதலே ஐபிஎல்-கான விளம்பர பணிகளை தொடங்கியுள்ளது.
விரைவில் தல தோனி நடித்துள்ள முழு விளம்பர படத்தின் வீடியோவும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.