நாயகன் மீண்டும் வரான் : அதிர்ந்த சேப்பாக்கம் , கெத்தாக இறங்கிய தல தோனி

Irumporai
in கிரிக்கெட்Report this article
சேப்பாக்கத்தில் நடைபெறும் சிஎஸ்கே அணியின் பயிற்சி ஆட்டத்தை பார்க்கவந்த ரசிகர்கள், தோனிக்கு வரவேற்பு கொடுத்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
ஐபிஎல்
இந்தியாவில் அதிக வரவேற்பை பெற்ற ஐபிஎல் கிரிக்கெட் தொடர் வரும் மார்ச் மாதம் 31 ம் தேதி தொடங்குகின்றது. ஆகவே அணைத்து ஐபிஎல் அணியின் வீரர்களும் வெற்றிக்காக கடுமையன பயிற்சியினை மேற்கொண்டு வருகின்றனர்.
சிஎஸ்கே
அந்த வகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி மற்றும் சக வீரர்கள் சென்னை சேப்பாக்கத்தில் பயிற்சி செய்து வருகின்றனர், இந்த நிலையில் அணி வீரர்களுகிடையே நடந்த பயிற்சி ஆட்டத்தின் போது கேப்டன் தோனி மைதானத்திற்கு உள்ளே வரும் வீடியோ காட்சியினை சிஎஸ்கே அணி தனது சமூகவலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளது.
தோனி
அந்த வீடியோவில் தோனி ஆடுகளத்தில் களமிறங்கும் போது ரசிகர்கள் தோனி.. தோனி என அரங்க அதிர முழக்கமிட்ட இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
Nayagan meendum varaar… ??#WhistlePodu #Anbuden ? pic.twitter.com/3wQb1Zxppe
— Chennai Super Kings (@ChennaiIPL) March 27, 2023
சிஎஸ்கே தனது முதல் போட்டியினை குஜராத் அணியுடன் மோதுகின்றது இது மார்ச் 31 ல் நடக்க உள்ளது.