“ரோகித் ஷர்மா தான் என் மீது நம்பிக்கை வைத்தார்” - தல தோனியை முதுகில் குத்திய சிஎஸ்கே வீரர்..கடுங்கோபத்தில் ரசிகர்கள்!

Swetha Subash
in கிரிக்கெட்Report this article
இந்தியா வந்துள்ள இலங்கை கிரிக்கெட் அணி, இந்திய அணியுடன் மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று வருகிறது.
இந்த தொடரின் 2-வது போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.
காயம் காரணமாக 2 மாதம் ஓய்வுக்கு பிறகு இலங்கை தொடருக்காக அணியில் திரும்பிய ஜடேஜா, இந்த போட்டியில் பேட்டிங் வரிசையில் 5-வது வீரராக களமிறங்கி 18 பந்துகளில் 45 ரன்கள் குவித்தார்.
அவரின் அதிரடி ஆட்டம் காரணமாக 17. 1-வது ஓவரிலேயே இந்திய அணி வெற்றி இலக்கை எட்டியது. இதன் மூலம் தொடர்ந்து 11 போட்டியில் இந்தியா வென்றது.
எப்போதும் பேட்டிங் வரிசையில் 7-வது வீரராக களமிறங்கும் ஜடேஜாவுக்கு இந்த முறை 5-வது வீரராக களமிறங்க ரோகித் ஷர்மா வாய்ப்பு வழங்கினார்.
இது குறித்து பேசும்போது, ஜடேஜா பேட்ஸ்மேனாக வளர்ந்து வருவதால் இனி அவரை நடுவரிசையில் அடிக்கடி பார்ப்பீர்கள் என்று ரோகித் கூறியிருந்தார்.
அதற்கு ஏற்றார் போல், ஜடேஜா 2-வது போட்டியிலும் அசத்திவிட்டார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஜடேஜா,
“நான் இப்போதெல்லாம் ஒரு பேட்ஸ்மேனாக உணர்கிறேன். ரோகித் ஷர்மா தான் என் மீது நம்பிக்கை வைத்து 5-வது இடத்தில் களமிறங்க வாய்ப்பு அளித்தார்.
இதன் மூலம் சூழலுக்கு ஏற்றவாறு என்னால் விளையாட முடியும். என் மீது நம்பிக்கை வைத்து இந்த பொறுப்பை வழங்கிய ரோகித்துக்கும், அணி நிர்வாகத்துக்கம் நன்றி.
எதிர்காலத்திலும் இதே போன்று வாய்ப்பு கிடைத்தால், அதிலும் சிறப்பாக விளையாடுவேன்” என கூறினார்.
இதனிடையே, ஜடேஜாவை பேட்ஸ்மேனாக அடையாளப்படுத்தி அவருக்கு பேட்டிங் செய்ய வாய்ப்பு வழங்கியது தல தோனி தான்.
சிஎஸ்கே அணிக்காக விளையாடும் போது ஜடேஜாவை நடுவரிசையில் களமிறக்கி தோனி வாய்ப்பு கொடுத்தார்.
ஆனால், அது பற்றி ஜடேஜா வாய் திறக்காமல், ரோகித் ஷர்மாவுக்கு நன்றி கூறி, தோனியை முதுகில் குத்திவிட்டதாக ரசிகர்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.