துப்பாக்கி சுடும் போட்டியில் தங்கம் வென்றார் தல அஜித்
சென்னையில் நடைபெற்ற துப்பாக்கி சுடும் போட்டியில் முதலிடம் பிடித்து தங்கம் வென்றார் தல அஜித். சினிமாவில் நடிப்பதோடு கார் ரேஸ், மெக்கானிக், போட்டோகிராபி, ஏரோ மாடலிங் தயாரிப்பு, சமையல், ஆளில்லா சிறிய ரக விமானம் தயாரித்தல், கல்லூரி மாணவர்களுக்கு ட்ரோன் பயிற்சி அளிப்பது என அனைத்து துறைகளிலும் நடிகர் அஜித்குமார் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில், தற்போது வலிமை படப்பிடிப்பு இடைவெளியில் சென்னை ரைஃபிள் கிளப்பில் துப்பாக்கி சுடுதல் பயிற்சியில் கவனம் செலுத்தி வந்த அஜித், 46-வது தமிழ்நாடு மாநில துப்பாக்கி சுடுதல் போட்டியில் பங்கேற்று முதலிடத்தை பிடித்துள்ளார்.
முதலிடம் பிடித்த அஜித்துக்கு தங்கப் பதக்கம் வழங்கப்பட்டது. இதனை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.