‘‘அவர் ஹாய் சொன்ன தொனியே அவ்வுளவு அழகு’’ - அஜித்தை ஒரேடியாக புகழ்ந்த தெலுங்கு நடிகர்

AjithKumar thala Valimai️ pnavdeep
By Irumporai Sep 12, 2021 07:45 PM GMT
Report

தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித் குமார். ரசிகர்களால் தல என அன்போடு அழைக்கப்படும் இவருக்கு உலகம் முழுவதும் ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர்.

தற்போது வலிமை படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு கடந்த சில தினங்களுக்கு முன்பு தான் ரஷ்யாவில் முடிந்தது,படத்தின் படப்பிடிப்பு முடிந்தவுடன் படக்குழுவினர் அனைவரும் சென்னை திரும்பினார்கள். ஆனால் அஜித் மட்டும் சென்னை திரும்பாமல் ரஷ்யாவிலேயே இருந்தார்.

அவர் ரஷ்யாவில் இருந்து 5000 கிலோ மீட்டர் பைக்கில் தனது இருசக்கர வாகனத்திலே பயணிக்க திட்டமிட்டு இருந்ததாக தகவல் வெளியானது. அஜித் ரஷ்யாவில் உள்ள கொலம்னா சாலைகளில் 5 ஆயிரம் கிலோ மீட்டர் தனது இருசக்கர வாகனத்திலே பயணித்து இருக்கிறார்.

அப்போது அவர் பைக் பயணத்தின் போது நடிகர் நவ்தீப்புடன் சென்று இருந்தார் போல. நடிகர் நவதீப், அஜித் குமாருடன் எடுத்த புகைப்படத்தை தனது சமூக வலைதளங்களில் பதிவிட்டு இருக்கிறார்.

அந்த பதவில், இந்த மனிதனின் தூய அன்பு. அவருடைய "ஹாய்" சொன்ன தொனியைக் கேட்டு நான் ஆச்சரியப்பட்டேன். அதனை கேட்டு நாங்கள் ஏற்கனவே பல முறை, பல வருடங்கள் சந்தித்து இருப்பது போன்று தெரிந்தது. அது என்னை மிகவும் வியக்க வைக்கிறது.

‘‘அவர் ஹாய் சொன்ன தொனியே அவ்வுளவு அழகு’’  - அஜித்தை ஒரேடியாக புகழ்ந்த தெலுங்கு நடிகர் | Thala Ajith Spotted Biking Around Russia

அவருடைய எளிமையான நுண்ணறிவுள்ள குணமும் அனுபவமும் கண்டு நான் மகிழ்ச்சியடைகிறேன். உண்மையிலேயே அவர் ஒரு அற்புதமான மனிதர். thala for a reason“எனப் பதிவிட்டு இருக்கிறார்.